தேடுதல்

இரு கொரிய நாடுகளின் தலைவர்கள் இரு கொரிய நாடுகளின் தலைவர்கள்  

அரசுத்தலைவர்களின் சந்திப்பு, கொரிய மக்களுக்கு பரிசு

கொரிய அரசுத்தலைவர்களுக்கிடையே நிகழ்ந்த சந்திப்பும், அங்கு உருவான ஒப்பந்தங்களும் கொரிய மக்களுக்குக் கிடைத்துள்ள பரிசு – கர்தினால் Andrew Yeom Soo-jung

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வட மற்றும் தென் கொரியத் தலைவர்களுக்கிடையே நிகழ்ந்த சந்திப்பும், இச்சந்திப்பில் உருவான ஒப்பந்தங்களும் கொரிய மக்களுக்குக் கிடைத்துள்ள பெரும் பரிசு என்றும், தொடர்ந்து இவ்விரு நாடுகளும் ஒப்புரவில் வளர தொடர்ந்து செபிக்கவேண்டும் என்றும் கொரிய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Pyongyangல் நடைபெற்ற கொரிய அரசுத்தலைவர்களின் சந்திப்பிற்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் சிறப்பாக செபித்து வருவதாக கூறினார் என்று, சோல் பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் விருப்பத்தைத் தொடர்ந்து, வட மற்றும் தென் கொரிய மக்கள், ஒரே ஆலயத்தில் இணைந்து திருப்பலியில் பங்கேற்கும் நாளை நோக்கி, தான் ஆவலோடு காத்திருப்பதாக, கர்தினால் Soo-jung அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 18, இச்செவ்வாயன்று தென் கொரிய அரசுத்தலைவர், Moon Jae-in அவர்கள், வட கோரிய அரசுத்தலைவர், Kim Jong Un அவர்களை, Pyongyang நகரில் சந்தித்தது, இவ்வாண்டில், இவ்விரு தலைவர்களும் மேற்கொண்ட மூன்றாவது சந்திப்பு.,

இச்சந்திப்பின் பயனாக, வட கொரியாவின் ஏவுகணை தளங்கள் மூடப்படும் என்றும், யுரேனியம் தயாரிப்பு நிறுத்தப்படும் என்றும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2018, 15:33