தேடுதல்

சிரியா புலம்பெயர்ந்த சிறார் சிரியா புலம்பெயர்ந்த சிறார் 

அப்பாவி மக்களின் உயிர் காக்கப்பட திருஅவை....

பெரிய நாடுகளின் ஆதரவுடன் இடம்பெறும் சிரியா உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என குரல் கொடுத்துள்ளது தலத்திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இரஷ்ய போர் விமான பாதுகாப்புடன், சிரியா அரசு துருப்புக்கள் இட்லிப் தீவிரவாத குழுக்களைத் தாக்க திட்டமிட்டிருப்பது, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கு வழி வகுக்கலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளது, சிரியா கத்தோலிக்க திருஅவை.

அரசுக்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிடியிலிருக்கும் கடைசி இடமான Idlibல் இரஷ்ய துருப்புக்களின் துணையுடன் சிரியா இராணுவத்தினர் தாக்குதலை நடத்தும்போது, பெரிய அளவில் பொதுமக்களும் பாதிக்கப்படுவர் என்ற அச்சத்தை வெளியிடும் தலத்திருஅவை அதிகாரிகள், பல ஆயிரக்கணக்கானோர் புலம்பெயரும் ஆபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்

சிரியா அரசுத் துருப்புகளுக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்றுவந்த போர், தற்போது, வெளிநாடுகளின் ஆதரவுடன் இடம்பெறும் மோதலாக உருவெடுத்துள்ளது என குற்றம் சாட்டும் செய்தி நிறுவனங்கள், சிரியாவின் பின்புலமாக இரஷ்யாவும், ஈரானும் நிற்பதையும், இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதரவாக, சவுதி அரேபியாவும், அதற்கு ஆதரவான வளைகுடா நாடுகள், மேற்கத்திய நாடுகள் ஆகியவை நிற்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

சிரியாவின் வடபகுதியில் உள்ள சில குர்த் இனத்தவரின் பகுதிகள், மத்தியிலும் கிழக்கிலும் தென்பகுதியிலும் உள்ள சில பாலவனப் பகுதிகள் தவிர ஏனைய பகுதிகள் அனைத்தும் தற்போது சிரியா அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே வந்துள்ளன.( Asia News)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2018, 15:43