பங்களாதேஷ் நாட்டில் Rohingya இனத்தவரின் குடிசைகள் பங்களாதேஷ் நாட்டில் Rohingya இனத்தவரின் குடிசைகள் 

Cox's Bazar பாலைநிலமாவதை தடுக்க காரித்தாஸ்

Cox's Bazarஐ சுற்றியுள்ள குன்றுகள் பாலைநிலமாவதைத் தடுப்பதற்காக, அப்பகுதியில் மரக்கன்றுகளையும், காய்கறி செடிகளையும், புற்களையும் பயிரிடுவதற்கு பங்களாதேஷ் காரித்தாஸ் திட்டமிட்டுள்ளது.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மியான்மாரின் Rohingya இன புலம்பெயர்ந்தோர்க்காக, பங்களாதேஷில் முகாம்கள் அமைப்பதற்கென வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக, அவ்விடங்களை பல்வேறு விதமான புற்கள், காய்கறி செடிகள், மற்றும் மரக்கன்றுகளை நடுவதற்கு, பங்களாதேஷ் காரித்தாஸ் திட்டமிட்டுள்ளது.

மியான்மார் இராணுவத்திற்கும், Rohingya இனப் புரட்சியாளர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் தொடங்கிய பின்னர், ஏறத்தாழ பத்து இலட்சம் Rohingya மக்கள், பங்களாதேஷின் Cox's Bazar ஐ சுற்றியுள்ள குன்றுகளில் அடைக்கலம் தேடினர். உள்ளூர் மற்றும் பன்னாட்டு உதவி நிறுவனங்கள், அம்மக்களுக்குத் தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கூடார வசதிகளை அமைத்துக் கொடுத்தன.

தொடக்கத்தில் இந்த புலம்பெயர்ந்த மக்கள், அருகாமையிலுள்ள காடுகளுக்குச் சென்று மரங்களை வெட்டி வந்தனர். இதனால் காடுகள் நிறைந்த குன்றுப் பகுதிகளில் மரங்கள் இல்லாத நிலை உருவானது. எடுத்துக்காட்டுக்கு, Ukhia மற்றும் Teknaf முகாம்களில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த குடும்பங்கள், ஒவ்வொரு நாளும் சமைப்பதற்கென ஏறக்குறைய, 2,250 டன்கள் விறகை வெட்டி வருகின்றன எனக் கூறப்படுகின்றது.

பங்களாதேஷ் காரித்தாசின் தன்னார்வலர்கள், 15 ஆயிரம் குடும்பங்களுக்கு, மரக்கன்றுகளை அளித்துள்ளனர், மேலும் 27 குடும்பங்களுக்கு, அவற்றை அளிக்கும் திட்டம் உள்ளதாக, ஆசியச் செய்தி கூறுகின்றது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2018, 15:40