சிரியா போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிரியா போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் 

சிரியாவில் குர்த் இனத்தவரால் பள்ளிகள் மூடல்

குர்த் இனத்தவர் பகுதியில் பல கிறிஸ்தவப் பள்ளிகளை அந்த அரசு மூடியுள்ளது என்றும், அந்த இனத்தவர், கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்ட விரும்புகின்றனர் என்றும், ஆயர் Hindo கூறியுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சிரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்களை வெளியேற்றுவதற்கு குர்த் இனத்தவர் முயற்சித்து வருகின்றனர் என்று, அப்பகுதியின் Hassaké-Nisibi கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் Jacques Behnam Hindo அவர்கள் கூறியுள்ளார்.

Aid to the Church in Need கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிடம் இவ்வாறு கூறியுள்ள ஆயர் Hindo அவர்கள், சிரியா அரசின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல், குர்த் சனநாயக கட்சியின் செல்வாக்கில் நடத்தப்படும் அரசு, தனக்கு விருப்பமான பாடத் திட்டங்களை அமைத்துள்ளது என்று கூறியுள்ளார். 

இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து, உள்ளூர் அரசு, நூறு அரசு பள்ளிகளை தந் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்றும், கிறிஸ்தவ சிறார் அதிகமாகப் படிக்கும் தனியார் பள்ளிகளை அந்த அதிகாரிகள் அணுகுவதில்லை என்றும், ஆயர் Hindo அவர்கள், கூறியுள்ளார்.

குர்த் இனத்தவர் பகுதியில் பல கிறிஸ்தவப் பள்ளிகளை அந்த அரசு மூடியுள்ளது என்றும், அப்பள்ளிகள் அரசால் அறிவிக்கப்படும் பாடத்திட்டங்களை ஏற்பதில்லை என காரணம் சொல்லியுள்ளது என்றும், குர்த் இனத்தவர், கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்ட விரும்புகின்றனர் என்றும், ஆயர் Hindo அவர்கள், மேலும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2018, 14:57