பங்களாதேஷில் திருத்தந்தை பிரான்சிஸ் பங்களாதேஷில் திருத்தந்தை பிரான்சிஸ் 

பங்களாதேஷ் திருஅவையின் பத்தாண்டு திட்டம்

குடும்பம், ஏழ்மை, சுற்றுச்சூழல், குடிபெயர்வோர், கல்வி, மத நல்லிணக்கம், கிறிஸ்தவ ஒன்றிப்பு போன்ற அனைத்திலும் மேம்பட பங்களாதேஷ் ஆயர்களின் பத்தாண்டு திட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அடுத்த பத்தாண்டுகளுக்குரிய செயல்திட்டங்களை வகுத்து அறிவித்துள்ளது பங்களாதேஷின் தலத்திருஅவை

குடும்பங்களின் நலவாழ்வு, வறுமை ஒழித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிபெயர்வோர் நலன் ஆகியவை, அடுத்த பத்தாண்டுகளுக்கு மேய்ப்புப்பணி திட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் என கூறியுள்ள பங்களாதேஷ் ஆயர்கள், இத்தகைய அணுகுமுறை தலத்திருஅவையின் சாட்சிய வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என உரைத்தனர்.

அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள், மதிப்பீடுகளின் வழியில் பயிற்சியளித்தல் போன்றவைகளுக்கும், அடுத்த பத்தாண்டுகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் கூறினர் ஆயர்கள்.

இது தவிர, சமூக-பொருளாதார வளர்ச்சி, தற்சார்புடைமை, மதங்களிடையே இணக்க வாழ்வு, கிறிஸ்தவ ஒன்றிப்பு, இறையழைத்தல் ஊக்குவிப்பு போன்றவைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர், பங்களாதேஷ் ஆயர்கள்.

இந்த நவீன காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, ஆயர்களின் பத்தாண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் சிட்டகாங் பேராயர் மோசஸ் கோஸ்டா. (ucanews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2018, 15:35