உலக ஆயர்கள் மாமன்றம் உலக ஆயர்கள் மாமன்றம் 

நேர்காணல் – உலக ஆயர்கள் மாமன்றங்கள்

அக்டோபர் 03, வருகிற புதன்கிழமையன்று வத்திக்கானில், இளையோர் பற்றிய 15வது உலக ஆயர்கள் மாமன்றம் ஆரம்பிக்கின்றது

மேரி தெரேசா - வத்திக்கான்

அக்டோபர் 03, வருகிற புதன்கிழமையன்று வத்திக்கானில் 15வது உலக ஆயர்கள் மாமன்றம் ஆரம்பிக்கின்றது. இதையொட்டி, உலக ஆயர்கள் மாமன்றங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார், அ.பணி முனைவர் A.இராயப்பன் அவர்கள். பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 28 ஆண்டுகளாக பெங்களூரு தூய பேதுரு குருத்துவ கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழகம் மற்றும் இந்திய திருஅவை சட்ட வல்லுனர்கள் கழகத்தின் தலைவர், பெங்களூரு தூய பேதுரு குருத்துவ கல்லூரியின் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். விவிலியம் முழுவதையும் தனது குரலில் பதிவுசெய்து குறுந்தகடில் வெளியிட்டுள்ளார். இவர் தமிழக ஆயர் பேரவையின் மாதா தொலைக்காட்சியில் திருஅவை சட்டங்கள், வாழ்வுதரும் இறைவார்த்தை பற்றிய நிகழ்ச்சிகளை வழங்குபவர்.

நேர்காணல் – உலக ஆயர்கள் மாமன்றங்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2018, 15:01