தேடுதல்

ஜிம்பாபுவே கிறிஸ்தவர்கள் ஜிம்பாபுவே கிறிஸ்தவர்கள்  

ஜிம்பாபுவேயில் பதட்டநிலைகளை அகற்ற முயற்சி

ஜிம்பாபுவேயின் இறுக்கமான சூழல்களில் துப்பாக்கிச்சூடு வன்முறைகளில் ஈடுபட்டுள்ள தரப்புகள், தங்களின் தவறான செயல்களை ஏற்று, நீதி வழியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர், ஜிம்பாபுவே கிறிஸ்தவத் தலைவர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான்

ஜிம்பாபுவே நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களுக்குப்பின், ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே இடம்பெற்றும்வரும் மோதல்கள் மற்றும் வன்முறைகள் உருவாக்கியுள்ள பதட்டநிலைகளைக் களைவதற்கு, அந்நாட்டின் கிறிஸ்தவத் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

கடந்த ஜூலை 30ம் தேதி நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில், அரசுத்தலைவர் Emmerson Mnangagwa அவர்களின் கட்சி, மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (50.8 விழுக்காடு) வெற்றி பெற்றுள்ளது. இவ்வெற்றி, திருட்டுத்தனமானது என, எதிர்கட்சியினர் குறை கூறிவருவதால், நாட்டில் பதட்டநிலை உருவாகியுள்ளது. ஆகஸ்ட் முதல் தேதியன்று வெடித்த வன்முறையில் குறைந்தது ஆறு பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகள், வன்முறையை நிறுத்தி, நாட்டில் அமைதிக்கு வழியமைக்குமாறு, ஜிம்பாபுவே கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். (NCR)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2018, 15:29