சுற்றுச்சூழல் கேடு சுற்றுச்சூழல் கேடு 

சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கு கத்தோலிக்கர் தவம்

வியட்நாமில் ஒவ்வோர் ஆண்டும், 1,26,000 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும், புற்றுநோயால் ஒவ்வோர் ஆண்டும் 94 ஆயிரம் பேர் இறக்கின்றனர் - நலவாழ்வு வல்லுனர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

செப்டம்பர் முதல் தேதி கடைப்பிடிக்கப்படும், படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளை முன்னிட்டு, வியட்நாம் கத்தோலிக்கர், சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்காக, செபங்களையும் தவமுயற்சிகளையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாள், செப்டம்பர் 1, வருகிற சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும்வேளை, சுற்றுச்சுழல் கடுமையாய் மாசடைந்துள்ளதை நினைவில்கொண்டு, அந்நாளில் தவமுயற்சிகளை மேற்கொள்ளுமாறு, வியட்நாமின் Vinh மறைமாவட்டம், கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Vinh மறைமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு, சுற்றுச்சூழல் மாசுகேடால், உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும், மண் அரிப்புகளும், சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்பட்டுள்ளன எனவும், அப்பணிக்குழு எச்சரித்துள்ளது.

நுரையீரல் புற்றுநோய், வயிறு புற்றுநோய், ஈரல் புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய், மார்பு புற்றுநோய் ஆகிய ஐந்தாலும் வியட்நாமில் மக்கள் பெருமளவில் தாக்கப்படுகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டில், படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளை உருவாக்கினார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2018, 15:37