தேடுதல்

ஈரான், துருக்கி, இரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஈரான், துருக்கி, இரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள்  

சிரியா குறித்து செப்டம்பர் 7ல் கூட்டம்

ஈரான், இரஷ்யா மற்றும் துருக்கி நாடுகளின் தலைவர்களின் கூட்டம் குறித்து, சிரியா அரசு நம்பிக்கையுடன் இருக்கின்றது. மேலும், இதில், Idlib பகுதியின் நிலைமை முக்கியமாக விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

சிரியாவில் அமைதியை நிலைநிறுத்துவது குறித்து, வருகிற செப்டம்பர் 7ம் தேதியன்று, ஈரான், துருக்கி, இரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நடத்தவிருக்கும் உயர்மட்ட அளவிலான கூட்டம், பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவரும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், அலெப்போ அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Georges Abou Khazen.

பன்னாட்டு அரசியல் அளவில் எடுக்கப்படும் இம்முயற்சியை, சிரியாவிலுள்ள மக்கள் வரவேற்பதாகவும், இந்தத் தலைவர்களின் கூட்டம், பதட்டநிலைகளைக் குறைக்கும் மற்றும், புதிய வன்முறைக்குத் தூபமிடாது என்று தான் நம்புவதாகவும், ஆயர் Abou Khazen அவர்கள் கூறியுள்ளார்.

ஈரானின் வடக்கேயுள்ள Tabriz நகரத்தில், Rouhani, Putin மற்றும் Erdogan ஆகிய, ஈரான், இரஷ்யா மற்றும் துருக்கி நாடுகளின் தலைவர்கள் சந்தித்து, கூட்டம் நடத்தவுள்ளது குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய ஆயர் Abou Khazen அவர்கள், இத்தலைவர்களின் இம்முயற்சி மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

எட்டாவது ஆண்டாக சண்டை இடம்பெற்றுவரும் சிரியா குறித்து, வருகிற செப்டம்பர் 7ம் தேதியன்று இடம்பெறுவது, இந்த மூன்று நாடுகளின் தலைவர்களுக்கு இடையே, கடந்த நவம்பரிலிருந்து நடைபெறும் மூன்றாவது கூட்டமாகும். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2018, 15:32