சீனாவில் தகர்க்கப்பட்ட ஆலயம் சீனாவில் தகர்க்கப்பட்ட ஆலயம்  

சீனாவில் 3வது ஆலயம் தகர்ப்பு

சீனாவில் ஆலயம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த கத்தோலிக்கர், “எனது ஆலயத்தைத் திருப்பித் தாருங்கள், எனது இதயத்தைத் திருப்பித் தாருங்கள்” எனச் சொல்லி, போராட்டம் நடத்தினர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

சீனாவின் Shandong மாநிலத்தின் Jinan மறைமாவட்டத்தில், இவ்வாண்டில் 3வது ஆலயம் தகர்க்கப்பட்டுள்ளது குறித்து கத்தோலிக்கர் கவலை தெரிவித்துள்ளனர்.

Huashan நகரிலுள்ள Qianwang கத்தோலிக்க ஆலயத்திற்கு, ஆகஸ்ட் 13ம் தேதியன்று 170க்கும் அதிகமான அதிகாரிகள் வந்து தகர்த்தனர் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

கடந்த ஜூலை 17ம் தேதி, Liangwang கத்தோலிக்க ஆலயம், கனரக இயந்திரங்கள் வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதற்குமுன்னர், Shilihe கத்தோலிக்க ஆலயமும் இடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, Qianwang கத்தோலிக்க ஆலயம் இடிக்கப்பட்டதற்கு 70 கத்தோலிக்கர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, வேறோர் இடத்தில் ஆலயத்தைக் கட்டித்தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

1750ம் ஆண்டில் கட்டப்பட்ட Qianwang கத்தோலிக்க ஆலயம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை முன்னிட்டு, 1938ம் ஆண்டில் அது மீண்டும் கட்டப்பட்டது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2018, 15:24