தேடுதல்

டப்ளின் குடும்பங்கள் மாநாடு திருப்பலி டப்ளின் குடும்பங்கள் மாநாடு திருப்பலி 

குடும்ப அன்பு, கடவுளின் அன்பை போதிக்கின்றது

இயேசு விரும்பிய திருஅவையை அமைப்பதற்கும், திருஅவையை உறுதிப்படுத்துவதற்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் நாம் ஒன்றிணைய வேண்டும் - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கடவுளின் அன்பு பற்றி உலகிற்குப் போதிக்கும் முதல் முயற்சியாக, குடும்பத்தில் அன்பு நிலவ வேண்டும் என்று, குடும்பங்களின் 9வது உலக மாநாட்டில் கூறினார், வத்திக்கான் அதிகாரி ஒருவர்.

டப்ளின் நகரில் நடைபெற்றுவரும், குடும்பங்களின் உலக மாநாட்டில், ஆகஸ்ட் 23, இவ்வியாழனன்று திருப்பலி நிறைவேற்றிய, திருப்பீட துறவியர் பேராயத் தலைவர், கர்தினால் João Braz de Aviz அவர்கள், குடும்பத்தில் அன்பு இருந்தால் மட்டுமே, உலகில் கடவுளின் அன்பை வெளிப்படுத்தி, அதைப் பரப்ப இயலும் என்று கூறினார்.

குடும்பத்தில் அன்பின்றி, கடவுளின் பிள்ளைகளாகவும், இன்னும், நல்ல தம்பதியராகவும், பெற்றோராகவும், உடன்பிறப்புக்களாகவும் வாழ இயலாது என்றும் மறையுரையாற்றிய கர்தினால் Braz de Aviz அவர்கள், ஒரு குடும்பம் அன்பை வெளிப்படுத்துவதால் மட்டுமே, அது, உலகிற்கு மகிழ்வாக மாற முடியும் என்றும் கூறினார்.  

மேலும், குடும்ப விழுமியங்கள் தாக்கப்படும்போது, இருளின் வழியாகச் சுடர்விட்ட திருக்குடும்பத்தைப் பின்பற்றுவதற்கு திருஅவை முயற்சிக்க வேண்டும் என்று, டப்ளின் குடும்ப மாநாடு நிகழ்வு ஒன்றில் கூறினார், இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

ஆகஸ்ட் 22, இப்புதனன்று, டப்ளினில் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், குடும்பம் என்ற அமைப்பே அச்சுறுத்தப்படும்வேளையில், இயேசு, மரி, யோசேப்பு ஆகிய மூவரையும் கொண்ட திருக்குடும்பத்தை, நாம் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும் என்று, மறையுரையாற்றினார். (CNA/EWTN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2018, 15:18