தேடுதல்

Vatican News
செபிக்கும் பெண்கள் செபிக்கும் பெண்கள் 

இல்லத்தரசிகள் ஊதியம் பெறத் தகுதி

வீடுகளில் இருந்துகொண்டே தங்கள் பிள்ளைகளைப் பராமரிக்கும் ஊதியமற்ற உழைப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், கர்தினால் மால்கம் இரஞ்சித்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

வீடுகளில் தங்கி குழந்தைகளைப் பராமரிக்கும் அன்னையரை ஊக்குவிப்பதற்காக, அவர்கள் ஆற்றும் தியாகம்நிறை சேவைகளுக்கு ஊதியம்  வழங்கப்பட வேண்டும் என்று, இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார்.

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் 400 வருட வரலாற்றைக் கொண்ட மடுமாதா விழா ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பிக்கப்பட்டவேளை, அவ்விழா நாளில் அத்திருத்தலத்தில்  திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், இவ்வாறு கூறினார்.

தங்கள் பிள்ளைகளை, சரியான கிறிஸ்தவ மற்றும் குடும்ப விழுமியங்களில் வளர்ப்பதற்கு உதவியாக, அன்னையர்க்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் கர்தினால் இரஞ்சித் அவர்கள், மறையுரையில் கூறினார்.

நம் பெண்கள் தங்கள் பிள்ளைகளை, மற்றவருடன் விட்டுவிட்டு வேலைக்குச் செல்கின்றனர் என்றும், தங்கள் குழந்தைகளை இந்த உலகில் சரியான விழுமியங்களில் வளர்க்க வேண்டுமெனில், அக்குழந்தைகள் கவனமாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கர்தினால் கூறினார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம், சில கலாச்சார விதிமுறைகளையும், மதிப்பீடுகளையும் அழித்துள்ளது என்றும் கர்தினால் குறை கூறினார். (UCAN)

20 August 2018, 16:21