தேடுதல்

பிலிப்பீன்ஸில் யோகிப் புயல் பிலிப்பீன்ஸில் யோகிப் புயல் 

வெள்ளப்பெருக்கிலிருந்து கோவில்களில் அடைக்கலம்

பிலிப்பீன்ஸில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கென கோவில்களை திறந்து விட்டுள்ளது தலத்திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் தலைநகரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பெருமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவும் நோக்கில் கோவில்களைத் திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் மனிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

கடந்த வார இறுதியில் பிலிப்பீன்ஸில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கால் 11 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மக்கள் தங்குவதற்கு உதவும் நோக்கில் கோவில்களைத் திறந்துவிடுமாறு அழைப்பு விடுத்த கர்தினால் தாக்லே அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார்.

சில இடங்களில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு காணப்படும் வெள்ளப்பெருக்கு, இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது எனவும் கூறியுள்ள மனிலா கர்தினால் அவர்கள்,  சுற்றுச்சூழலை பொறுப்புடன் பாதுகாக்கத் தவறுவதால் ஏற்படும் அவல நிலைகள் குறித்தும், தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிவாரணப் பணிகளை முழுமூச்சுடன் துவக்கியுள்ளதாகவும், ஒருங்கிணைந்த நிவாரணப் பணிகளை ஏற்று நடத்த, அரசு ஒரு புதுத் துறையை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது. (CBCP)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2018, 13:54