ஐ.நா.வில் வத்திக்கான் கொடி ஐ.நா.வில் வத்திக்கான் கொடி 

ஐ.நா.வின் 73வது பொது அமர்வுக்காக திருப்பீடம் செபம்

உலகில் அமைதி, மனிதக் குடும்பத்தின் முன்னேற்றம், புலம்பெயர்ந்தோர் குறித்த உலகளாவிய ஒப்பந்தம், காச நோய் ஒழிப்பு போன்றவற்றுக்கு ஐ.நா. எடுத்துவரும் முயற்சிகள் வெற்றிபெற திருப்பீட தூதரகத்தில் செபம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 73வது பொது அமர்வு, வருகிற செப்டம்பர் 18ம் தேதி ஆரம்பிக்கப்படவிருப்பதையொட்டி, நியு யார்க் நகரிலுள்ள, ஐ.நா.வுக்கான திருப்பீட தூதரகம், அதற்கு முந்தைய நாள் மாலையில், செப வழிபாடு ஒன்றை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

பிரிந்த கிறிஸ்தவ சபைகள் மற்றும் ஏனைய சமயத் தலைவர்களுடன் நடத்தப்படவிருக்கும் இச்செப வழிபாட்டில், கொலம்பிய ஆயர் பேரவையின் முன்னாள் தலைவரும், கொலம்பிய அமைதி நடவடிக்கையில் பங்கெடுத்த தலைவர்களில் ஒருவருமான, பேராயர், Luis Castro Quiroga அவர்கள், தியான சிந்தனைகளை வழங்குவார்.

ஐ.நா.வின் 73வது பொது அமர்வின் தலைவர், ஐ.நா. பொதுச் செயலர் உட்பட பல முக்கிய தலைவர்களும் இச்செப வழிபாட்டில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 73வது பொது அமர்வு (UNGA 73), செப்டம்பர் 18ம் தேதியிலிருந்து, 30ம் தேதி வரை நடைபெறும். (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2018, 16:08