கொலம்பியாவில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு கொலம்பியாவில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு 

தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது அவசியம்

கொலம்பியாவில் இரண்டரை ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட சமூகநலத் தலைவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை நிறுத்தப்பட ஆயர்கள் விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தென் மெரிக்க நாடான கொலம்பியாவில், 2017ம் ஆண்டு சனவரி முதல் தேதியிலிருந்து, 2018ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, 311 சமூகத் தலைவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளவேளை, நாடெங்கும் சமூகத் தலைவர்கள் பாதுக்காக்கப்படுமாறு, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

FARC புரட்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்குப் பின், சமூகத் தலைவர்களை அழிப்பது அதிகரித்துள்ளது என்றும், கெரில்லா அமைப்பால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த பகுதி, தற்போது எவருமே வாழாத இடமாக உள்ளது என்றும், கொலம்பிய காரித்தாஸ் அமைப்பு மற்றும், தேசிய அமைதிக் குழுவின் தலைவரான, ஆயர் Héctor Fabio Henao அவர்கள் தெரிவித்தார்.

நீண்டகால உள்நாட்டு மோதல்களால் துன்புற்றுள்ள கொலம்பியாவில், மனித சமுதாய உணர்வும், துன்புறுவோரைத் தொடர்புகொண்டு ஒருமைப்பாட்டைச் தெரிவிப்பதும் குறைந்துள்ளது எனவும் கவலை தெரிவித்துள்ளார், ஆயர் Henao.

சமூகத் தலைவர்களை, சமூகத்திலிருந்து ஒழிப்பது, சமூகத்தில் உறுதியான தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை உருவாக்கும் என்றும், சமூக உரிமைகளுக்காகப் போராடும் தலைவர்கள் அவசியம் என்றும் ஆயர் Henao அவர்கள் தெரிவித்தார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2018, 15:55