ஐவரி கோஸ்டில் விடுதலையாகி வரும் முன்னாள் அரசுத்தலைவரின் துணைவியார் ஐவரி கோஸ்டில் விடுதலையாகி வரும் முன்னாள் அரசுத்தலைவரின் துணைவியார் 

கைதிகள் விடுதலை குறித்து ஐவரி கோஸ்ட் ஆயர்கள்

அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது, நாட்டில் அமைதியைக் கொணர்வதற்கு எடுக்கப்பட்டுள்ள முக்கியமான நடவடிக்கை, ஐவரி கோஸ்ட் ஆயர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டில், 2010ம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்குப்பின் நடந்த பிரச்சனை தொடர்பாக, கைது செய்யப்பட்ட 800 பேருக்கு, அந்நாட்டின் 58வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மன்னிப்பு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம், வரலாற்று சிறப்புமிக்கது என்று பாராட்டியுள்ளனர், கத்தோலிக்க ஆயர்கள்.   

மன்னிப்பும் ஒப்புரவும்     

ஐவரி கோஸ்ட் அரசுத்தலைவர் Alassane Ouattara அவர்களின் இத்தீர்மானத்தை மகிழ்வோடு வரவேற்பதாக அறிவித்துள்ள ஆயர்கள், இந்நடவடிக்கை, தேசிய அளவில் மன்னிப்பு மற்றும், ஒப்புரவுக்கு வழியமைத்து, நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், நாட்டின் நிலையான தன்மைக்கும் பயனுள்ளதாக அமையும் என்றும் கூறியுள்ளனர்.

ஐவரி கோஸ்ட் ஆயர்கள் சார்பாக, ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Antoine Koné அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில், அரசுத்தலைவரின் இத்தீர்மானம் நம்பிக்கையைக் கொணர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

 ஐவரி கோஸ்ட் கத்தோலிக்கர், அரசுத்தலைவருக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துமாறும் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மன்னிப்புப் பெற்றுள்ள 800 கைதிகளுள், அந்நாட்டின் முன்னாள் அரசுத்தலைவரின் துணைவியார் Simone Gbagbo அவர்களும் ஒருவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2018, 16:23