டப்ளின் உலக குடும்பங்கள் மாநாடு டப்ளின் உலக குடும்பங்கள் மாநாடு 

சிக்கலான கேள்விகளுக்குப் பதில்கூற பயப்படக் கூடாது

ஆகஸ்ட் 21, இச்செவ்வாயன்று அயர்லாந்தின் 26 மறைமாவட்டங்களிலும், ஒரே நேரத்தில், உலக குடும்பங்கள் மாநாட்டின் தொடக்க திருப்பலி நிறைவேற்றப்பட்டது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

எதிர்கொள்வதற்கு கடினமான கலாச்சார மாற்றங்களைச் சந்தித்துவரும் கத்தோலிக்க திருஅவை, சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாகப் பதில்களைத் தேடுவதைவிட, சிரமங்கள் நிறைந்த கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டுமென, அயர்லாந்து கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறினார்.

அயர்லாந்தில், 9வது உலக குடும்பங்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்வாக, திருப்பலி நிறைவேற்றிய, Derry மறைமாவட்ட ஆயர் Donal McKeown அவர்கள், அச்சுறுத்துகின்ற உலகில், விசுவாச குழுக்கள், கடவுளின் நம்பிக்கையின் இடங்களாக மாற வேண்டும் என்று செபித்தார்.

கடினமான வார்த்தைகள் அடிக்கடி ஆதிக்கம் செலுத்துவதுபோன்று தோன்றும் உலகில், சிரமமான கலந்துரையாடல்களை, கருணைநிறை வழியில் திருஅவைகள் ஊக்குவிக்க வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டு, அதற்காகச் செபித்தார், Derry ஆயர் McKeown.

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும் உலக குடும்பங்கள் மாநாடுகள், சமுதாயம் மற்றும் திருஅவையின் அடித்தளமாக விளங்கும், திருமணம் மற்றும் குடும்பம் பற்றி கவனம் செலுத்தி வருகின்றன. (CNA/EWTN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2018, 16:15