தேடுதல்

கொழும்புவின் முன்னாள் பேராயர் ஆசுவால்டு கோமிஸ் கொழும்புவின் முன்னாள் பேராயர் ஆசுவால்டு கோமிஸ் 

இலங்கை பேராயர் கல்விக்கு முக்கியத்துவம்

ஐம்பது ஆண்டுகள் ஆயர் பணியில், சிறப்பான சமய மற்றும் சமூகநலப் பணிகள் ஆற்றியதற்காக, பேராயர் ஆசுவால்டு கோமிஸ் அவர்களுக்கு அரசுத்தலைவர் பாராட்டு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இலங்கையில், 1960களில் கத்தோலிக்கப் பள்ளிகள், அரசுடமையாக்கப்பட்டபோது, மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டதாக, கொழும்புவின் முன்னாள் பேராயர் ஆசுவால்டு கோமிஸ் அவர்கள் கூறினார்.

பேராயர் கோமிஸ் அவர்கள், ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா, கடந்த ஜூலையில் சிறப்பிக்கப்பட்டவேளையில், இலங்கை அரசுத்தலைவர், மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள், பேராயர் அவர்களின் மிகச்சிறப்பான பணிகளைப் பாராட்டி கவுரவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய, 85 வயது நிறைந்த, பேராயர் கோமிஸ் அவர்கள், கத்தோலிக்கரைத் தாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட அரசின் அக்கொள்கை ஏற்கத்தக்கதல்ல என்றார்.

கத்தோலிக்கப் பள்ளிகள், மனமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என அரசு நினைத்ததால், அவ்வாறு செயல்பட்டது என்றுரைத்த பேராயர் கோமிஸ் அவர்கள், இலங்கையில் கத்தோலிக்கத் திருஅவை மிகவும் முக்கியமானது எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

பேராயர் கோமிஸ் அவர்கள், தன் பணிக்காலத்தில், 15 பள்ளிகளைத் தொடங்கினார். மேலும், இவர் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அமலமரி அருள்சகோதரிகள் சபையையும் இவர் ஆரம்பித்துள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2018, 15:45