இந்திய கிறிஸ்தவர்களின் கறுப்பு நாள் பேரணி இந்திய கிறிஸ்தவர்களின் கறுப்பு நாள் பேரணி 

தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக..

இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்ட பணிக்குழு, திருச்சியில் மாநாடு நடத்தி, தலித் கிறிஸ்தவர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படுமாறு அரசை வலியுறுத்தியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் உரிமைகள், தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழங்குவதற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கு, கிறிஸ்தவ சமூகம் வாக்களிக்குமாறு, தமிழகத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்ட பணிக்குழு, திருச்சியில் நடத்திய மாபெரும் பேரணி மற்றும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 2019ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலிலும், கிறிஸ்தவ சமூகம், இவ்வாறு செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில், தாங்களும் இணைக்கப்படுவதற்கு தலித் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் உரிமைக்கு ஆதரவளிக்காத கட்சிகள் மற்றும் அவற்றின் தோழமை கட்சிகளை, கிறிஸ்தவ சமூகம், புறக்கணிக்குமாறும், இம்மாநாட்டில் கூறப்பட்டது.

இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்ட பணிக்குழு ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில், தமிழக ஆயர் பேரவைத் தலைவர் மதுரைப் பேராயர் அந்தோனி பாப்புசாமி, துணைத்தலைவர், செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன், தமிழக ஆயர் பேரவையின், பிற்படுத்தப்பட்ட பணிக்குழுத் தலைவர், திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி உட்பட, பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். (CBCI)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2018, 15:25