கேரளாவில் வெள்ளத்தில் நடந்து செல்லும் மனிதர் கேரளாவில் வெள்ளத்தில் நடந்து செல்லும் மனிதர் 

நம்மை காக்க இயற்கையை காப்போம்

மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவின் இரு மாவட்டங்களில் தன் உதவிப் பணிகளை துவக்கியுள்ளது Christian Aid அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

தட்ப வெப்ப நிலை மாற்றங்களை சமாளிக்க வேண்டிய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் கேரளாவைப்போல், இந்தியாவில் வெள்ளப் பெருக்குகளால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளது Christian Aid என்ற அமைப்பு.

10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு மழையால் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய நிலைகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்கு, இயற்கை சுற்றுச்சூழல் அழிவுகளை தடுக்கவேண்டியது நம் கடமையாகிறது என்றார் Christian Aid அதிகாரி Kat Kramer.

உலகம் வெப்பமாதல் தொடர்ந்தால், இந்தியாவும் தென் ஆசிய நாடுகளும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என உரைத்த Kramer அவர்கள், குளிர்காலத்தில் அதிக மழையும், கோடைகாலத்தில் அதிக வெப்பமும் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரித்தார்.

கேரளாவின் வடபகுதியில் உள்ள வயநாடு மாவட்டத்திலும், மத்தியில் உள்ள இடுக்கி மாவட்டத்திலும் 10 ஆயிரம் பேர் வீதம் முதல் கட்டமாக உதவிகளை வழங்க Christian Aid அமைப்பு முன்வந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2018, 16:27