தேடுதல்

Vatican News
Ghoutaவில் அரசின் உணவுப்பொருள்களைப் பெறும் புலம்பெயர்ந்தோர் Ghoutaவில் அரசின் உணவுப்பொருள்களைப் பெறும் புலம்பெயர்ந்தோர்   (AFP or licensors)

புலம்பெயர்ந்தோர் அன்புக்காக வாடுகின்றனர்

தமஸ்குவின் புறநகரில் புரட்சியாளரின் கட்டுப்பாட்டிலிருந்த இடங்களிலிருந்து புலம்பெயர்ந்துள்ள மக்கள், ஒவ்வொரு நாளின் உயிர் வாழ்வுக்குப் போராடி வருகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

சிரியா அரசுத்தலைவர் பாஷர் அல் அசாத் அவர்களுக்கு எதிராக நீண்டகாலமாகப்   போரிட்டுவரும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவந்துள்ள மக்கள், உணவைவிட, அன்புக்காக அதிகம் ஏங்குகின்றனர் என்று, சிரியா காரித்தாஸ் கூறியுள்ளது.  

நீண்டகாலமாக தங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த புரட்சியாளர்கள் தற்போது துருக்கி நாட்டிற்குச் சென்று மகிழ்வாக வாழ்கின்றனர், ஆனால் நாங்களோ, எங்கள் பிள்ளைகளுக்குக்கூட உணவு கொடுக்க இயலாமல் துன்புறுகின்றோம், உணவைவிட அன்புக்காக அதிகம் ஏங்குகின்றோம் என, இம்மக்கள் கூறினர் எனவும் காரித்தாஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சிரியாவின் கிராமங்கள் சிறுமிகளின்றி காலியாக இருக்கின்றன என்றும், ஐஎஸ் அமைப்பினர் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

சிரியாவின் ஒரு கிராமம் பற்றி விவரித்த 79 வயது நிரம்பிய Ishaq Nisaan என்பவர், தனது கிராமத்து ஆலயம் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களால் நிரம்பி வழிந்தது, ஆனால் அது தற்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். (AsiaNews)

17 August 2018, 16:04