செபமாலை ஏந்தும் கை செபமாலை ஏந்தும் கை 

இளையோர் செபமாலை செபிக்க உதவும் காரித்தாஸ்

எருசலேம் காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன், 250 பேர், செபமாலை தயாரிக்கும் 22 சிறிய தொழிற்கூடங்களில் வேலை செய்து வருகின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

எருசலேமில் வாழும் கிறிஸ்தவக் குடும்பங்களின் பொருளாதார நிலைமையை முன்னேற்றவும், இளையோரை செபமாலை செபிப்பதற்குத் தூண்டவுமென, எருசலேம் காரித்தாஸ் அமைப்பு, 15 இலட்சம் செபமாலைகள் தயாரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

“செபமாலைகள் தயாரிப்பதன் வழியாக வாழ்க்கைத்தரத்தை மாற்றுதல்” என்ற திட்டத்தில், சிறிய ஒலிவ மரத் தொழிற்கூடங்களில் ஏறத்தாழ 250 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது, எருசலேம் காரித்தாஸ்.

இத்திட்டத்தின் வழியாக, மக்களுக்கு பாதுகாப்பான ஒரு வருங்காலத்தை அமைத்துக்கொடுப்பதுடன், அமைதி, அன்பு மற்றும் நீதி நிறைந்த உலகு உருவாக்கப்படுதற்கு, இளையோரைச் செபிக்கத் தூண்டவும் முயற்சித்து வருகிறது, காரித்தாஸ் அமைப்பு.

மத்திய அமெரிக்க நாடாகிய பானமாவில், 2019ம் ஆண்டில் நடைபெறும் உலக இளையோர் நிகழ்வில் கலந்துகொள்ளும் இளையோர்க்கு, இந்தச் செபமாலைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2018, 13:15