கர்தினால் டேனியல் டினார்டோ கர்தினால் டேனியல் டினார்டோ  

பாலின முறைகேடுகளை ஒழிக்க, பொதுநிலையினரின் பங்கு

பாலின முறைகேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டில், இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் தீவிரமான சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையில் நிகழ்ந்துள்ள பாலின முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதையடுத்து, அந்நாட்டு ஆயர்களிடையே, வெளிப்படையான, உறுதியான கட்டுப்பாட்டு முயற்சிகளை, ஆயர்கள் மேற்கொள்ளவிருக்கின்றனர் என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ அவர்கள் கூறியுள்ளார்.

திருஅவையில் பல நாடுகளில் நிகழ்ந்துள்ள பாலின முறைகேடுகளும், அவற்றை மறைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகளும் திருஅவையில் திறந்ததொரு காயமாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளத்தைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சனையில் ஆயர்களின் முயற்சிகள் மிகத் தீவிரமாக அமையும் என்று, கர்தினால் டினார்டோ அவர்கள் உறுதி கூறியுள்ளார்.

இந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோருடன் அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவை ஒன்றித்துள்ளது என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் டினார்டோ அவர்கள், அருள்பணியாளர்கள் பயிற்சி, அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள், ஆயர்களின் தேர்வு ஆகிய அம்சங்களில் இன்னும் கடுமையான சட்டதிட்டங்களை உருவாக்க, ஆயர் பேரவை முயலும் என்று வாக்களித்துள்ளார்.

இதற்கிடையே, பாலின முறைகேடுகள் குறித்து எழும் புகார்களை தீர விசாரிக்கும் குழுக்களை, பொது நிலையினர் தலைமையேற்று நடத்துவர் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2018, 15:57