தேடுதல்

காமரூனையும் நைஜீரியாவையும் பிரிக்கும் Cross ஆறு காமரூனையும் நைஜீரியாவையும் பிரிக்கும் Cross ஆறு 

பொதுத் தேர்தல்கள் சுதந்திரமாக நடைபெற அழைப்பு

பொதுத் தேர்தல், நாட்டு மக்களின் வாழ்வை நிர்ணயிக்கும் முக்கியமான நடவடிக்கை என்பதால், தங்களின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் – காமரூன் ஆயர்கள்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்க நாடான காமரூனில், வருகிற அக்டோபர் 7ம் தேதியன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்கள், ஒளிவுமறைவின்றி, சுதந்திரமாக இடம்பெற வேண்டும் என, ஆயர்கள் இவ்வெள்ளியன்று அழைப்பு விடுத்துள்ளனர்.

பொதுத் தேர்தல்கள் குறித்து, மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள, காமரூன் ஆயர்கள், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், ஒற்றுமை மற்றும் அமைதியைக் காக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.  காமரூன் ஆயர் பேரவைத் தலைவரான, Doula பேராயர் Samuel Kléda அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், நாட்டின் வட மேற்கிலும், தென் கிழக்கிலும், பதட்டநிலைகள் நிலவும் இந்நாள்களில், இத்தேர்தல் இடம்பெறவுள்ளது என்றும், நாட்டை அமைதியின் அன்னையிடம் அர்ப்பணித்து, நாட்டிற்காகத் திருஅவை செபிக்கின்றது என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.  

காமரூன் நாட்டிற்கு கிழக்குப் பகுதி எல்லையில் இடம்பெறும் மத்திய ஆப்ரிக்க குடியரசின் சண்டையும், நாட்டின் வடக்கே போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளும், பதட்டநிலைகளை உருவாக்கியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2018, 15:49