ஆயுதங்களைக் கைவிட்ட முன்னாள் போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்ட முன்னாள் போராளிகள் 

கானாவில் ஊழலை ஒழிக்க பேராயர் அழைப்பு

கானாவில் 2010ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 71 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்ற நிலையில், விசுவாசிகள் ஊழலை விலக்கி நடக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார், தலத்திருஅவை அதிகாரி ஒருவர்

மேரி தெரேசா – வத்திக்கான்

ஆப்ரிக்க நாடாகிய கானாவில், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, அந்நாட்டின் கேப் கோஸ்ட் பேராயர் Gabriel Charles Palmer-Buckle அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கானா நாட்டில், 90 விழுக்காட்டுக்கு அதிகமானோர் சமய நம்பிக்கையுள்ளவர்கள் என்றும், அந்நாட்டில் இடம்பெறும் 90 விழுக்காட்டு ஊழலுக்கு, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பொறுப்பு என்றும், பேராயர் Palmer-Buckle அவர்கள் கூறியுள்ளார்.

கானா மக்கள் சமய உணர்வு மிக்கவர்கள் மற்றும் கடவுள் பயம் உள்ளவர்கள் எனவும் கூறியுள்ள, பேராயர் Palmer-Buckle அவர்கள், ஊழல் செய்வது தீமையாகும், எனவே இதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்பதை, விசுவாசிகள் உணர்ந்திருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

“ஊழலுக்கு எதிராய்க் குரல் எழுப்புங்கள், அதனை எதிர்த்து நில்லுங்கள், அது குறித்து அறிவியுங்கள்” என்ற தலைப்பில், கானா நாட்டின் பல்சமயத் தலைவர்கள் இணைந்து ஆரம்பித்த நடவடிக்கையில், இவ்வாறு உரையாற்றியுள்ளார், கத்தோலிக்க பேராயர் Palmer-Buckle. (GNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2018, 15:38