தேடுதல்

உயரம் தாண்டுதல் போட்டி உயரம் தாண்டுதல் போட்டி 

ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒன்றிப்புக்கு வாய்ப்பு

இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 18ம் தேதியன்று ஆரம்பிக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆசிய நாடுகளிடையே பிணைப்பை வலுப்படுத்தும், ஜகார்த்தா பேராயர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய மக்களிடையே ஒன்றிப்பை உருவாக்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளன என்று, ஜகார்த்தா பேராயர், Ignatius Suharyo அவர்கள் கூறினார்.

இந்தோனேசியாவில், ஆகஸ்ட் 18ம் தேதி முதல், செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி, ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த பேராயர் Suharyo அவர்கள், இந்த நிகழ்வில் கத்தோலிக்கர் ஊக்கமுடன் பங்கெடுத்து, ஒன்றிப்பைக் கட்டியெழுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசிய வரலாற்றில் இரண்டாவது முறையாக நடைபெறவிருப்பது குறித்து பெருமையுடன் பேசியுள்ள ஜகார்த்தா பேராயர் அவர்கள், இந்நிகழ்வு, நாட்டின் விருந்தோம்பல் பண்பையும், பெருமையையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.

இந்தோனேசியாவின், ஜகார்த்தா மற்றும் Palembang  நகரங்களில், ‘ஆசியாவின் சக்தி’ என்ற தலைப்பில், 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதன் நிறைவு நிகழ்வு, ஜகார்த்தாவின்  Gelora Bung Karno அரங்கத்தில் நடைபெறும். 15 ஆயிரம் விளையாட்டு வீரர்கள், தொழில்நுட்ப அலுவலகர்கள் உட்பட, ஏறத்தாழ 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் ஜகார்த்தா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2018, 16:15