தேடுதல்

மனிலா Genfest 2018 இலச்சினை மனிலா Genfest 2018 இலச்சினை 

மனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து இளையோர்

மனிலாவில் நடைபெற்றுவரும் Genfest விழா, ஆசியா மற்றும், ஐரோப்பாவுக்கு வெளியே இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்

மேரி டிரிசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,06,2018. Genfest எனப்படும், ஃபோக்கோலாரே இயக்கத்தின் உலகளாவிய இளையோர் விழா, பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலாவில், ஜூலை 6, இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ளது. 

ஜூலை 08, வருகிற ஞாயிறு வரை நடைபெறும், இந்த இளையோர் விழாவில், நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏறத்தாழ ஆறாயிரம் இளையோர் கலந்துகொள்கின்றனர்.

மனிலாவில் நடைபெற்றுவரும் Genfest விழா, ஆசியா மற்றும், ஐரோப்பாவுக்கு வெளியே இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.

“அனைத்து எல்லைகளையும் கடந்து” என்ற தலைப்பில், மனிலாவில் நடைபெற்று வரும் 11வது Genfest இளையோர் விழா, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை இளையோர் அனுபவிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2018, 16:52