ஐரோப்பிய ஆயர்கள் பேரவைத் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ ஐரோப்பிய ஆயர்கள் பேரவைத் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ 

நிக்கராகுவாவில் தேசிய உரையாடலுக்கு ஐரோப்பிய ஆயர்கள் அழைப்பு

நிக்கராகுவாவில் அமைதி நிலவ, திருத்தந்தை பிரான்சிஸ், திருப்பீடத் தூதர், பேராயர் Sommertag ஆகிய தலைவர்களின் விண்ணப்பங்களுடன் ஐரோப்பிய ஆயர்கள்

நிக்கராகுவா நாட்டில் அதிகரித்துவரும் வன்முறைகள் குறித்து மிகவும் கவலைகொண்டுள்ள அதேநேரம், அவ்வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென, ஐரோப்பிய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய ஆயர்கள் சார்பில், ஐரோப்பிய ஆயர்கள் பேரவைத் தலைவரான, இத்தாலிய கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள், நிக்கராகுவா ஆயர் பேரவைத் தலைவரும், மானாகுவா பேராயருமான, கர்தினால் Leopoldo José Brenes Solórzano அவர்களுக்கு எழுதியுள்ள செய்தியில், விரைவில் தேசிய அளவில் உரையாடல்கள் தொடங்கப்பட்டு, பிரச்சனைகள் களையப்படவும், சரியான தீர்வுகள் காணப்படவும் முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து ஆதாயங்களைவிட, அமைதியும், மனித வாழ்வும் இன்றியமையாதத் தேவைகள் எனக் குறிப்பிட்டுள்ள கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், துன்புறும் மக்களுடன், ஐரோப்பிய திருஅவை மிக நெருக்கமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜூலை 22, இஞ்ஞாயிறன்று, நிக்கராகுவா நாட்டிற்காக, உண்ணாநோன்புடன் செபங்களை எழுப்ப விண்ணப்பித்துள்ளனர், இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் ஆயர்கள்.

மேலும், நிக்கராகுவா அரசுத்தலைவரின் அடக்குமுறைக்கு எதிராக, அமெரிக்க நாடுகளின் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2018, 16:10