பாகிஸ்தானில், ஜூலை 25, பொதுத்தேர்தல்கள் பாகிஸ்தானில், ஜூலை 25, பொதுத்தேர்தல்கள்  

பாகிஸ்தான் திருஅவை அமைதியான தேர்தல் நாளுக்கு அழைப்பு

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் நாளில் எல்லா வாக்காளர்களும் வாக்குப்பதிவு செய்யுமாறு தலத்திருஅவை வலியுறுத்தல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில், ஜூலை 25, இப்புதன்கிழமையன்று நாடெங்கும் பொதுத்தேர்தல்கள் நடைபெறவுள்ளவேளை, இவை, சுதந்திரமாகவும், நியாயமாகவும் இடம்பெறுமாறு, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை அழைப்பு விடுத்துள்ளது. 

பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருஅவையின் மனித உரிமைகள் அமைப்பான, தேசிய நீதி மற்றும் அமைதி அவை, இப்பொதுத்தேர்தலையொட்டி விடுத்துள்ள விண்ணப்பத்தில்,  திருஅவை, எப்போதும், சனநாயகத்தையும், அனைத்து சனநாயக நடவடிக்கைகளையும் ஆதரிக்கின்றது என்று கூறியுள்ளது.

இப்பொதுத்தேர்தலின்போது, அனைத்து கண்காணிப்பாளர்களும், பொதுமக்கள் சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் அவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாமபாத்-ராவல்பிண்டி பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் உட்பட  அந்த தேசிய அவையின் இயக்குனர் மற்றும் செயல்திட்ட இயக்குனர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அவ்வறிக்கையில், தனிமனித நலன்களைத் தேடுவது அல்லது தேர்தலைப் புறக்கணிப்பது, சனநாயகத்திற்கு ஊறுவிளைவிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.  

பாகிஸ்தானில், உப இராணுவக் குழுக்களால் மூன்று வேட்பாளர்கள் ஏற்கனவே கொலைசெய்யப்பட்டுள்ளனர்(UCAN).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2018, 15:41