கந்தமால் ஏழு அப்பாவி கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக கந்தமால் ஏழு அப்பாவி கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக 

ஏழு அப்பாவி கிறிஸ்தவர்களை விடுதலை செய்ய கையெழுத்துக்கள்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், 2008ம் ஆண்டு ஆகஸ்டில் இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் பத்தாம் ஆண்டு நினைவு

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,13,2018. கந்தமால் மாவட்டத்தில் இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக, சிறையிலுள்ள ஏழு அப்பாவி கிறிஸ்தவர்களை விடுதலை செய்யுமாறு, ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிறிஸ்தவ செய்தியாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஆன்டோ அக்காரா அவர்கள், இணையதளம் (www.release7innocents.com) வழியாக விடுத்த அழைப்பை ஏற்று, ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு, அக்கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் பத்தாம் ஆண்டு

இலஷ்மானந்தா சரஸ்வதி எனப்படும் ஓர் இந்துமத சுவாமி அவர்கள், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதியன்று கொலை செய்யப்பட்டது தொடர்பாக இடம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் பத்தாம் ஆண்டை முன்னிட்டு, அக்கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக, மேலும் கையெழுத்துக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளில், ஏறத்தாழ நூறு கிறிஸ்தவர்கள் உயிரிழந்தனர். ஏறத்தாழ 300 ஆலயங்களும், ஆறாயிரம் கிறிஸ்தவ வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இவ்வன்முறையில் ஈடுபட்ட பல இந்துக்கள் கல்வியறிவற்றவர்கள் என்றும், பழிவாங்கும் இந்நடவடிக்கையில் ஈடுபட இவர்கள் தூண்டப்பட்டார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2018, 16:17