நிகராகுவா போராட்டத்தில் கர்தினால் பிரேனெஸ், ஆயர் சில்வியோ பேஸ் நிகராகுவா போராட்டத்தில் கர்தினால் பிரேனெஸ், ஆயர் சில்வியோ பேஸ் 

ஒற்றுமையை உருவாக்கும் சேவைகள் தொடரும் - நிகராகுவா ஆயர்கள்

நிகராகுவா ஆயர்களுக்கு தென் அமெரிக்க ஆயர் பேரவைகள் தங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்து வருகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,12,2018. நிகராகுவா நாட்டில் ஒற்றுமையை உருவாக்க தங்கள் சேவைகளை அளிக்க, அரசு விடுத்த அழைப்பை, நிகராகுவா தலத்திருஅவை தொடர்ந்து மதித்து, தன் சேவைகளைத் தொடரும் என்று அந்நாட்டு ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நிகராகுவா அரசுத்தலைவருக்கு எதிராகப் போராடியவர்களில் சிலர், திரியாம்பா நகர் புனித செபாஸ்டின் பசிலிக்காவில் அடைக்கலம் புகுந்ததையடுத்து, அக்கோவிலை அரசின் ஆதரவு படையினர் சூழ்ந்தனர்.

அம்மக்களை விடுவிக்கச் சென்ற நகராகுவா கர்தினால் Leopoldo José Brenes Solorzano அவர்களையும், திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Waldemar Sommertag, மற்றும் துணை ஆயர் Silvio José Baez Ortega ஆகிய மூவரையும் அரசு ஆதரவுக் குழுவினர் தாக்கினர்.

ஜூலை 9ம் தேதி நடைபெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜூலை 10ம் தேதி கூடிவந்த ஆயர்கள், நாட்டில் அமைதியையும், உரையாடலையும் தொடர்வதற்கு தங்கள் பணிகள் தொடரும் என்பதை ஓர் அறிக்கையின் வழியே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

நிகராகுவா ஆயர்களுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கும் வண்ணம், ஆர்ஜென்டீனா, கோஸ்டாரிக்கா, பானமா, பெரு மற்றும் மெக்சிகோ ஆயர்களும், கத்தோலிக்க விசுவாசிகளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது (Fides).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2018, 16:40