திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் Rai Boutros Bechara திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் Rai Boutros Bechara  

லெபனான் மாரனைட் முதுபெரும்தந்தை - ஓர் அரசு தேவை

லெபனான் நாடு எதிர்கொள்ளும் சவால்களில் கவனம் செலுத்துவதற்கு நிலையான அரசு அவசியம் என, தொடர்ந்து விண்ணப்பங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளையும், அப்பகுதியின் சவால்களையும் எதிர்கொள்வதற்கு, ஓர் அரசு விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்று, அரசியல் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார், லெபனான் மாரனைட் முதுபெரும்தந்தை கர்தினால் Bechara Boutros Raie.

"The Future" என்ற தினத்தாளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள, முதுபெரும்தந்தை கர்தினால் Bechara Raie அவர்கள், லெபனான் மக்களாகிய நாங்கள் ஓர் அரசை விரும்புகின்றோம் என்றும், இவ்வாறு ஒவ்வொரு நாளும் கூறி வருவதை அனைவரும் செவிமடுப்பார்கள் என நம்புகின்றேன் என்றும் கூறியுள்ளார்.

லெபனானில் அரசு அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் நாடு எதிர்கொள்ளும் எதிர்மறை விளைவுகளைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள முதுபெரும்தந்தை Bechara Raie அவர்கள், புதிய அரசு அமைப்பதற்கு பிரதமர் Saad Hariri அவர்களுக்கு இறைவன் உதவுவாராக எனவும் கூறியுள்ளார்.

கடந்த மே 8ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர், அரசுத்தலைவரின் விண்ணப்பத்தின்பேரில், தற்போதைய இடைக்கால அரசு, நாட்டின் விவகாரங்களை நிர்வகித்து வருகின்றது(Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2018, 15:36