தேடுதல்

பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா 

நாட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்தப்படும் சிறுபான்மையினர்

சொந்த நாட்டு மக்களையே அந்நியர்களாக உணரவைக்கும் இஸ்ரேலின் புதிய சட்டம் குறித்து எருசலேம் முதுபெரும் தந்தை அலுவலகம் கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

'இஸ்ரேல், யூத மக்களின் நாடு' என அண்மையில் அந்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அடிப்படைச் சட்டம், அந்நாட்டில் பூர்வீகமாக வாழும் மக்களுக்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும் அரசியலமைப்பின் வழியாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளை உறுதிச் செய்யவில்லை என்ற கவலையை வெளியிட்டுள்ளது, எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை அலுவலகம்.

இஸ்ரேலில் வாழும் மொத்த மக்களுள் 20 விழுக்காட்டினராக இருக்கும் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் குடிமக்களாக இருந்தாலும் தற்போதைய புதிய சட்டத்தின் வழியாக, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது என்கிறது, முதுபெரும் தந்தையின் அலுவலக அறிக்கை.

இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே குடியுரிமையுடன் வாழும் மக்கள், புதிய அரசியலமைப்பு சட்டம் வழியாக, தாங்கள் நாடற்றவர்கள் என்ற மனநிலையுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனக் கூறும் இந்த அறிக்கை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாக இருந்த அரேபிய மொழி, தற்போது கீழிறக்கப்பட்டு, 'சிறப்புத் தகுதியுடைய மொழி’ என மாற்றப்பட்டுள்ளது குறித்தும் கவலையை வெளியிட்டுள்ளது.

சொந்த நாட்டிற்குள் வாழும் அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடுமின்றி, சம உரிமைகளுடன் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதிச் செய்யும் ஐ.நா. விதிகளுக்கும், இஸ்ரேல் நாட்டு அரசியல் சாசனத்தின் அடிப்படை விதிகளுக்கும் எதிராக இப்புதிய சட்டம் செல்கிறது என மேலும் கூறியுள்ளது எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை அலுவலகம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2018, 16:53