கிரேக்க தீ விபத்தில் மீட்புப்பணிகள் கிரேக்க தீ விபத்தில் மீட்புப்பணிகள் 

கிரேக்க தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காரித்தாஸ் உதவி

கிரேக்க நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இத்தாலிய காரித்தாஸ் தன் உதவிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 23 முதல் கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சுற்றி ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இத்தாலியக் காரித்தாஸ் அமைப்பு உதவிகள் செய்து வருகிறது.

இத்தாலியக் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, அடிப்படை தேவைகளான உணவு, உடை, மருந்துகள் ஆகியவற்றை, கிரேக்க காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து வழங்கிவருகிறது.

கிரேக்க நாட்டில் ஏற்கனவே நிலவிவரும் பொருளாதார நெருக்கடியால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ள வறியோர் இந்த தீ விபத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர் என்று, கிரேக்க காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், மரிய அல்வெர்த்தி அவர்கள் கூறினார்.

2012ம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நேரத்தில் தன் பணியை அங்கு துவக்கிய இத்தாலியக் காரித்தாஸ் அமைப்பு, தற்போது, தன் உதவிகளை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜூலை 23ம் தேதி நிகழ்ந்த தீவிபத்தால், இதுவரை 100க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், மற்றும் காணாமல் போயுள்ளனர் என்றும், 500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2018, 14:34