தேடுதல்

Vatican News
இத்தாலிய ஆயர் பேரவை கூட்டத்தில் திருத்தந்தை இத்தாலிய ஆயர் பேரவை கூட்டத்தில் திருத்தந்தை  (AFP or licensors)

புலம்பெயர்வோருக்கு எல்லைகளை மூடுவது குறித்து ஆயர்கள்

புலம்பெயர்வோர் மீது அவநம்பிக்கை மற்றும் புறக்கணிப்பைக் காட்டும் சூழலை வளரக்கும் அச்சமெனும் கலாச்சாரம் குறித்து இத்தாலிய ஆயர்கள் எச்சரிக்கை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள, அச்சமெனும் கலாச்சாரச் சூழல் குறித்து கவலை தெரிவித்துள்ளனர், ஆயர்கள்.

“புலம்பெயர்வோரை வரவேற்பதற்கு அச்சம்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இத்தாலிய ஆயர்கள், புலம்பெயரும் மக்களில் பலர், நம்பிக்கையோடு மேற்கொள்ளும் பயணத்தில், இறப்பதைப் பார்த்து பழகிப்போய்விட்டோம் என்றும், இம்மக்களின் துன்பநிலை மேலும் தொடர்வதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

போர்கள், பசி, தனிமை, சித்ரவதை ஆகியவற்றுக்குப் பலியாகிவரும் இந்த ஏழை மக்களுக்கு நாம் பொறுப்பாளர்கள் என்பதை உணரவேண்டுமென்றும், மூடப்பட்ட எல்லைகள் மற்றும் எழுப்பப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களுக்கு எதிராக இம்மக்களின் அழுகுரல் கேட்கின்றது என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

இதற்கிடையே, இத்தாலிய புதிய அரசின் புலம்பெயர்வோருக்கெதிரான நிலைப்பாட்டால், புலம்பெயர்வோரைக் காப்பாற்றும் கப்பல்கள், இத்தாலிய எல்லையில் கரையிறங்க முடியாமல், பல நாள்களாக மத்தியதரைக் கடலிலே நிற்கின்றன என செய்திகள் கூறுகின்றன

20 July 2018, 15:19