முதுபெரும்தந்தை Ignace Youssif Younan முதுபெரும்தந்தை Ignace Youssif Younan 

“வந்து பாருங்கள்” பன்னாட்டு இளையோர் மாநாடு

லெபனானில் சிரியாக் கத்தோலிக்க இளையோர், “வந்து பாருங்கள்” என்ற தலைப்பில் மாநாடு ஒன்றில் கலந்துகொள்கின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

 “வந்து பாருங்கள் (யோவா.1,39)” என்பது, இயேசு கிறிஸ்து, எல்லாக் காலங்களிலும், தம் பக்கம் மனிதர்களை ஈர்ப்பதற்குப் பயன்படுத்திய முறை என்று, லெபனானில் நடைபெற்றுவரும் கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க இளையோரின் பன்னாட்டு மாநாட்டில் கூறப்பட்டது.

லெபனான் நாட்டின், Faytrunல், ஒளியின் நமதன்னை துறவு இல்லத்திற்கருகில், 18 வயதுக்கும், 35 வயதுக்கும் உட்பட்ட இளையோருக்கு, ஜூலை 17ம் தேதி முதல், வந்து பாருங்கள் என்ற தலைப்பில், பன்னாட்டு மாநாடு நடைபெற்று வருகிறது. 18 நாடுகளிலிருந்து இளையோர் பங்குபெறும் இம்மாநாடு, ஜூலை 22, வருகிற ஞாயிறன்று  நிறைவடையும்.

இம்மாநாடு பற்றிப் பேசியுள்ள, கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை Ignace Youssif Younan அவர்கள், உலகெங்கும் வாழ்கின்ற கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க இளையோர், தூய ஆவியாரில் தங்களைப் புதுப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைகின்றது என்று கூறினார்.

மத்திய கிழக்கிலிருந்து வெளியேறியுள்ள கிறிஸ்தவர்கள், குறிப்பாக, இளம் கிறிஸ்தவ தலைமுறையினர் மீதுள்ள அக்கறையினால் இம்மாநாடு நடத்தப்படுகின்றது என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.

மேலும், வருகிற அக்டோபர் 3ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை வத்திக்கானில், இளையோர் பற்றிய 15வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளது(Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2018, 15:45