தேடுதல்

மலாவி அரசுத்தலைவர் தேசிய செப நிகழ்வுக்குச் செல்கிறார் மலாவி அரசுத்தலைவர் தேசிய செப நிகழ்வுக்குச் செல்கிறார் 

வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் வழி வன்முறைக்கு காரணமாகாதீர்கள்

எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ, அரசியல்வாதிக்கோ, திருஅவை ஆதரவளிப்பதில்லை. ஆனால், கத்தோலிக்கர்கள் அரசியலில் ஈடுபடுவதையும், தேர்தலில் வாக்குகளை பதிவு செய்யும் கடமையையும் ஊக்குவிக்கிறது

பிரான்சிஸ் கிறிஸ்டோபர் - வத்திக்கான் செய்திகள்

வரும் ஆண்டு மே மாதம் மலாவி நாட்டில் இடம்பெற உள்ள பொதுத்தேர்தல் குறித்து சில வழிமுறைகளை மக்களுக்கு வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

எந்த ஒரு தனிப்பட்ட அரசியல்வாதிக்கோ, அரசியல் கட்சிக்கோ, தலத்திருஅவையால் ஆதரவு வழங்க முடியாது என தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ள ஆயர்கள், ஆனால் ஆட்சி அதிகாரப் பொறுப்பிலும், அரசியலிலும் கத்தோலிக்கர்கள் பங்கேற்பதற்கு முழு ஊக்கத்தையும் கொடுப்பதாக அதில் கூறியுள்ளனர்.

அரசியல் கட்சிகளுக்கு ஒரு பக்க சார்பாக ஆதரவு அளிப்பதையும், பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதையும், அருள்பணியாளர்களும், துறவறத்தாரும், வேதியர்களும், கத்தோலிக்க நிறுவனங்களும் கைவிடவேண்டும் என்பதை, தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.

வன்முறைகளைத் தூண்ட காரணமாயிருக்கும் வார்த்தைகள், செயல்பாடுகள், செயலற்ற தன்மைகள் போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் விலகியிருப்பதோடு, வாக்களிக்கும் தங்கள் உரிமையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மேலும் விண்ணப்பித்துள்ளனர், மலாவி நாட்டு ஆயர்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2018, 16:38