தேடுதல்

புலம்பெயர்ந்தோருடன் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே புலம்பெயர்ந்தோருடன் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

நாம் அனைவருமே புனிதத்தில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம்

நம் பெற்றோர் மற்றும் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் எளிய தொழிலாளிகள் ஆகியோரிடம் புனிதத்தைக் காணமுடியும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்

லூயிஸ் ஜெரோம் – வத்திக்கான் செய்திகள்

புனிதத்தில் வாழ முயற்சி செய்யுங்கள் என்று, பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி கருத்தரங்கில், ஜூலை 18, இப்புதனன்று வழங்கிய உரையில் கூறினார்.

திருமுழுக்கு பெற்ற அனைவருமே புனிதத்தில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், இந்தப் புனிதத்தை, நம் பெற்றோர், ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் எளிய தொழிலாளிகள் ஆகியோரிடம் காண முடியும் என்று எடுத்துரைத்தார்.

சமுதாயத்தில் காயப்பட்டோர், தவறுகள் செய்தோர் ஆகியோருடன் கிறிஸ்து தம்மையே அடையாளப்படுத்திக் கொண்டதுபோல், அவரது புனித வாழ்வில் பங்கேற்க விழையும் நம்மையும் வலுவிழந்தோருடன் அடையாளப்படுத்திக்கொள்ள அழைக்கிறார் என்று கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

தீமை, நன்மையை வெல்வதற்குப் பதில், தீமையை நன்மையால் வெல்வதே, கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கேற்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பிற்கு தகுந்த பதிலிறுப்பு என்று கர்தினால் தாக்லே அவர்கள், கருத்தரங்கில் பங்கேற்றவருக்கு அழைப்பு விடுத்தார்.

2013ம் ஆண்டு, கர்தினால் தாக்லே அவர்களால் துவக்கப்பட்ட புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி கருத்தரங்கு, இவ்வாண்டு தன் 5வது கூட்டத்தை நடத்தியது என்றும், இவ்வாண்டு கருத்தரங்கில் 2000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்றும் UCA செய்தி கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2018, 14:43