பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

கர்தினால் தாக்லே - உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக செபம்

பிலிப்பீன்சில் புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பு நிறைவு விழாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தார் கர்தினால்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த ஈராண்டுகளில், பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்த்தே அவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், உயிரிழந்துள்ள பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை நினைத்து கண்ணீர் சிந்தினார், அந்நாட்டு கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

ஜூலை 22, இஞ்ஞாயிறன்று நிறைவடைந்த, புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பு விழாவில் பங்குபெற்ற ஏறத்தாழ எட்டாயிரம் விசுவாசிகளுக்கு உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், உங்களைச் சுற்றி இடம்பெறும் இறப்புகள் குறித்து, நீங்கள் எல்லாரும் மகிழ்வடைகின்றீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார்.

உலகில் இடம்பெறும் பசிப்பிணிக்கு மத்தியில், நாம் பிறருக்கு, உணவளிப்பவர்களாக மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார், கர்தினால் தாக்லே.

மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய, பிலிப்பீன்ஸ் திருப்பீட தூதர் பேராயர் கபிரியேலே காச்சா அவர்கள், நாம் மக்களிடம் இரக்கம் காட்ட வேண்டுமெனில், அவர்களை எண்ணிக்கையில் நோக்காமல், ஒவ்வொருவரையும் தனித்துவமிக்கவர்களாகப் பார்க்க வேண்டுமென்று கூறினார்.

பிலிப்பீன்சில், கடந்த ஈராண்டுகளில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொலைகள் இடம்பெற்றுள்ளன என, காவல்துறை அறிவித்துள்ளது. அதேநேரம், இக்கொலைகள், அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையோடு தொடர்புடையவை என, மனித உரிமை குழுக்கள் கூறியுள்ளன(UCAN).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2018, 15:26