தேடுதல்

Vatican News
அமெரிக்காவில் வாழ்வுக்கு ஆதரவாக கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் வாழ்வுக்கு ஆதரவாக கிறிஸ்தவர்கள்  (oca.org )

மனித வாழ்வு சட்டமுறைப்படி காக்கப்பட செபங்கள்

மனித வாழ்வு காக்கப்படுவதற்கு அமெரிக்க ஆயர்கள் ஒன்பது வார நவநாள் செபங்களுக்கு அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், மனித வாழ்வு சட்டமுறைப்படி காக்கப்படுவது குறித்த விவாதங்களை உச்ச நீதிமன்றம் வருகிற செப்டம்பரில் தொடங்கவிருக்கும்வேளை, அந்நாட்டு ஆயர்கள் நவநாள் செபங்களை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 3ம் தேதிக்கும், செப்டம்பர் 28ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் வருகின்ற ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இக்கருத்துக்காகச் செபிக்கப்படும் என்றும், இச்செப முயற்சியில் கத்தோலிக்கர் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் என்றும், ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நவநாள் செபங்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் வாழ்வு, திருமணம் மற்றும் சமய சுதந்திரப் பணிக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஒவ்வொரு தலைப்புடன் இச்செபம் நடைபெறும் என்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் எடுக்கப்படும் மனித வாழ்வு குறித்த தீர்மானம், கத்தோலிக்கருக்கு மிகவும் முக்கியமானது என்றும், அப்பணிக்குழு கூறியுள்ளது. (CNA)

31 July 2018, 15:27