அரேபிய அன்னை மரியாவின் பெயரால், பஹ்ரைனில் எழுப்பப்படவிருக்கும் பேராலயம் அரேபிய அன்னை மரியாவின் பெயரால், பஹ்ரைனில் எழுப்பப்படவிருக்கும் பேராலயம் 

பஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்

பஹ்ரைன் தலைநகர் மானமாவில் அரேபிய அன்னை மரியாவின் பெயரால் புதிய பேராலயக் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்.

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள் 

ஜூலை,16,2018. அரேபிய வளைகுடாவின் பாதுகாவலராக கருதப்படும், அரேபிய அன்னை மரியாவின் பெயரால், பஹ்ரைன் நாட்டில் எழுப்பப்படவிருக்கும் ஒரு பேராலயத்தின் துவக்க விழா, அண்மையில், பஹ்ரைன் தலைநகர் மானமாவில் (Manama) நடைபெற்றது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

மானமா நகரிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் கட்டப்படவிருக்கும் இவ்வாலயத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை, பஹ்ரைன் மன்னர் Hamad bin Isa Al Khalifa அவர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

குவைத் திருப்பீடத் தூதர், பேராயர் Francisco Montecillo Padilla அவர்கள் கலந்துகொண்ட ஆலயக் கட்டுமானத் துவக்கவிழாவில், அப்பகுதியில் பணியாற்றும் வெளிநாட்டு கத்தோலிக்கர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது. 

ஏறத்தாழ 2000 பேர் அமரக்கூடிய முறையில் அமைக்கப்படவிருக்கும் இவ்வாலயமும், அதைச் சுற்றி, மேய்ப்புப்பணி, மற்றும் கல்விப்பணிகளுக்கென எழுப்பப்படும் கட்டடங்களும், 2021ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் செய்திகள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2018, 14:33