தேடுதல்

இயேசு சபை அருள்பணியாளர் சமீர் கலீல் சமீர் இயேசு சபை அருள்பணியாளர் சமீர் கலீல் சமீர் 

உலக விருது பெற்றுள்ள எகிப்து நாட்டு இயேசு சபை துறவி

கிறிஸ்தவ இஸ்லாமிய சமுதாயங்களுக்கிடையே உறவுப் பாலங்களை உருவாகிவரும் இயேசு சபை அருள்பணியாளருக்கு உலக அமைதி விருது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அரேபிய கிறிஸ்தவ பாரம்பரியத்தில் சிறந்த அறிஞரான இயேசு சபை அருள்பணியாளர் சமீர் கலீல் சமீர் (Samir Khalil Samir) அவர்களுக்கு, துன்புறும் கிறிஸ்தவர்களுக்கென உருவாக்கப்பட்ட Stephanus அறக்கட்டளையின் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

அரேபிய கிறிஸ்தவ பாரம்பரியத்தை உலகறியச் செய்ததன் வழியே, அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு வழி வகுத்ததால், அறிஞர் சமீர் அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதாக Stephanus அறக்கட்டளையின் தலைவர், Michaela Koller அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

1938ம் ஆண்டு எகிப்து நாட்டில் பிறந்த சமீர் அவர்கள், இஸ்லாமிய கிறிஸ்தவ உரையாடலில் கொண்டுள்ள புலமைத்துவம் காரணமாக, வத்திக்கான் உட்பட, உலகின் பல அவைகளில் உரையாற்றியுள்ளார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

தன் வாழ்வில் 60க்கும் மேற்பட்ட நூல்களையும், 1,500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள அருள்பணி சமீர் அவர்கள், மதங்களிடையே அமைதி நிலவாமல், உலகில் அமைதி நிலவ இயலாது என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கூறி வருகிறார்.

உலகில் எவ்வளவுதான் வன்முறை நிலவினாலும், இஸ்லாமியரை நம் சகோதரர்களாக, சகோதரிகளாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மட்டுமே நம்மை அமைதிக்கு அழைத்துச் செல்லும் என்று இயேசு சபை அருள்பணி சமீர் அவர்கள் கூறியுள்ளார்.

Stephanus அறக்கட்டளையின் விருது, அண்மைய ஆண்டுகளில், ஈராக் கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்களுக்கும், ஹாங்காங் முன்னாள் கர்தினால் ஜோசப் சென் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2018, 14:40