தேடுதல்

சாந்தோ தொமிங்கோவில் மத்திய அமெரிக்க தலைவர்களின் 5வது மாநாடு சாந்தோ தொமிங்கோவில் மத்திய அமெரிக்க தலைவர்களின் 5வது மாநாடு 

தொமினிக்கன் குடியரசு நாட்டு ஆயர்களின் அறிக்கை

சமுதாயத்தில், வறியோர், புலம்பெயர்த்தோர், குழந்தைகள், முதியோர் ஆகிய சக்தியற்றோருக்கு உதவுவதே கத்தோலிக்க திருஅவையின் சிறப்பான அழைப்பு, தொமினிக்கன் குடியரசு ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,04,2018. மனிதம் சார்ந்த எதார்த்தங்கள் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியால் ஒளிபெற வேண்டும் என்று, தொமினிக்கன் குடியரசு நாட்டின் ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தொமினிக்கன் குடியரசு நாட்டு ஆயர்கள், தங்கள் ஆண்டு கூட்டத்தை அண்மையில் துவக்கிய வேளையில், வன்முறை, ஊழல் மற்றும் வறுமை ஆகிய குறைபாடுகள் தங்கள் நாட்டை சீரழித்து வருவதைக் குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

கருவிலிருந்து கல்லறை முடிய மனித உயிர் மதிப்புள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், கருக்கலைப்பையும், 'யூத்தனேசியா' எனப்படும் கருணைக்கொலையையும் தொமினிக்கன் குடியரசு ஒருபோதும் சட்டமாக்கக் கூடாது என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

சமுதாயத்தில், வறுமைப்பட்டோர், புலம்பெயர்த்தோர், குழந்தைகள், முதியோர் ஆகிய சக்தியற்றோருக்கு உதவுவதே கத்தோலிக்க திருஅவையின் சிறப்பான அழைப்பு என்று, தொமினிக்கன் குடியரசு நாட்டின் ஆயர்கள், தங்கள் ஆண்டுக்கூட்டத்தின் துவக்கத்தில் எடுத்துரைத்துள்ளனர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2018, 15:28