தேடுதல்

சிலுவையின் கீழ் சந்திப்போம் சிலுவையின் கீழ் சந்திப்போம்  (AFP or licensors)

ஒருவரையொருவர் எதிர்கொள்ள உதவும் நற்செய்தி

நாம் ஒருவரையொருவர் எதிர்கொள்ளவும், அவர்களை சகோதர சகோதரிகள் என அங்கீகரிக்கவும் இன்றைய உலகில், கிறிஸ்துவின் நற்செய்தி உதவுகிறது

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

கிறிஸ்துவின் நற்செய்தி நாம் ஒருவரையொருவர் எதிர்கொள்ள மென்மையான மற்றும் உறுதியான குரலாக உள்ளது என மே 11, சனிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிளவுகள் மற்றும் மோதல்களால் சிதைந்திருக்கும் இன்றைய உலகில், கிறிஸ்துவின் நற்செய்தி நாம் ஒருவரையொருவர் எதிர்கொள்ளவும், அவர்களை சகோதர சகோதரிகள் என அங்கீகரிக்கவும், பன்முகத்தன்மைகளுக்கு மத்தியில் நல்லுறவை  வளர்க்கும் மென்மையான மற்றும் உறுதியான குரலாக உள்ளது என திருத்தந்தையின் குறுஞ்செய்தி மேலும் கூறுகிறது.

திருத்தந்தையுடன் சிவகங்கை ஆயர் சந்திப்பு

மேலும் இதே நாளில், சிவகங்கை மறைமாவட்டத்தின்  மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார். அப்போது சிவகங்கை மறைமாவட்டத்தைப் பற்றி ஆயரிடம் கேட்டறிந்த திருத்தந்தை அவர்கள், மறைமாவட்ட அருள்பணியாளர்கள், இருபால் துறவறத்தார் மற்றும் இறைமக்களுக்குத் தன்னுடைய ஆசியையும்  வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2024, 17:01