தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

கிறிஸ்தவ நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றம் அடையச் செய்யாது!

கிறிஸ்தவ நம்பிக்கையானது சோதனைகளின் மத்தியில் நிலைத்து நிற்கிறது, மேலும் அது நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டு, பிறரன்புப் பணிகள் வழியாக வளர்க்கப்படுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவ நம்பிக்கை என்பது நம்மை ஒருபோதும் ஏமாற்றமடையச் செய்யாது என்றும், அது கடவுளின் அன்பிலிருந்து நம்மை எதனாலும் யாராலும் பிரிக்க முடியாது என்ற உறுதியை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மே, 17, இவ்வெள்ளியன்று, தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையானது சோதனைகளின் மத்தியில் நிலைத்து நிற்கிறது, மேலும் அது நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டு, பிறரன்புப் பணிகள் வழியாக வளர்க்கப்படுகிறது என்றும்,  வாழ்க்கையில் முன்னேற இது நமக்கு உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2024, 15:43