தேடுதல்

காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட காட்டுத் தீ (கோப்புப் படம்)  காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட காட்டுத் தீ (கோப்புப் படம்)  

நிபுணர்கள் பங்குபெறும் வத்திக்கான் காலநிலை உச்சி மாநாடு!

விளையாட்டு மற்றும் ஆன்மிகம் பற்றிய இந்த அனைத்துலக மாநாடு, பன்முகப் பார்வையுடன், அதன் நெறிமுறை, சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் ஆன்மிக விழுமியங்களை ஆராய விரும்புகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் அறிவியல் அறிஞர்கள், மாநில மற்றும் உள்ளூர் தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள் வத்திக்கானில் "காலநிலை நெருக்கடியில் இருந்து தட்பவெப்ப நிலைத்தன்மை வரை" என்ற தலைப்பில் நிகழும் ஓர் உச்சிமாநாட்டில் சந்திக்கின்றனர் என்று செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

பாப்பிறை அறிவியல் கல்விக் கழகமும், பாப்பிறை சமூக அறிவியல் கல்விக் கழகமும் இணைந்து இந்த உச்சிமாநாட்டை நடத்தி வருவதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மே 15 முதல் 17 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், பருவநிலை மாற்றத் துறையில் வல்லுநர்கள் மற்றும் அதன் விளைவுகளைக் கையாளும் நகர மேயர்கள் மற்றும் மாநில அரசுத் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ளனர் என்றும் செய்திக் குறிப்பு உரைக்கின்றது.

மேலும் இவர்கள் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து வருகிறார்கள் என்றும், உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இதில் பங்கேற்கின்றனர் என்றும் குறிப்பிடும் அச்செய்திக் குறிப்பு, இவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் தங்களின் மேலான கருத்துகளைப் இம்மாநாட்டில் பகிர்ந்துகொள்வர் என்றும் தெளிவுபடுத்துகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2024, 15:12